சீனி விலை அதிகரிக்கப்படும்

தற்போது இலங்கையில் சீனி விலை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சீனியின் விலை கடந்த ஆறு ஆண்டுகளில் என்றும் இல்லாதவாறு கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு மெட்ரிக் டொன் சீனியின் விலை 3 வீதத்தினால் அதிகரித்து தற்போது 37,760 இந்திய ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 15 நாட்களுக்குள் இந்த விலை அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரும்பு விளைச்சல் அதிகமுள்ள பிரதேசங்களில் பருவமழை குறைவடைந்துள்ளமை, இருப்பு குறைவு காரணமாக சீனி விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது பண வீக்கத்தை அதிகரித்துள்ளதுடன் சீனி ஏற்றுமதிக்கு தடை விதிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

சீனி உற்பத்தி வெகுவாக குறைவடையுமெனவும் சீனியை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு விரும்பவில்லை எனவும் சீனி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் சீனி ஏற்றுமதியை இந்தியா தடை செய்யுமென எதிர்பார்க்கபப்டுகிறது.

இதனிடையே சர்வதேச சந்தையில் சீனி விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சீனி விலை அதிகரித்துள்ள போதிலும் சர்வதேச சந்தையுடன் ஒப்பிடுகையில் விலை சற்று குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சர்வதேச சிந்தையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சீனி விலை 38 வீதத்தினால் குறைவாக காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த பின்னணியில் இலங்கையிலும் சீனி விலை அதிகரிக்குமென எதிர்பார்க்கபப்டுகிறது.

Previous articleமின்கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு!
Next articleமுல்லைத்தீவு வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு!