24,000 அரச ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்!

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மின்சார சபை மறுசீரமைப்பின் போது அந்த ஊழியர்களை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் சட்டமூலம் சமர்ப்பிப்பு

இதற்கமைய, மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியின் பின்னர் குறித்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleமுழு நாட்டை முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்
Next articleயாழில் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது!