யாழில் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது!

நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று (07) மாலை அதே இடத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 3 வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நாளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் கூறினர்.

Previous articleசனல் 4 இக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!
Next articleவவுனியாவில் அதிர்ச்சி – புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மாயம்!