யாழில் இளம் தம்பதியினரை போதைக்கு அடிமையாக்கிய கும்பல் கைது!

யாழில் இளம்வயதினரை போதைப் பொருள் பாவணைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நால்வர் அடங்கிய கும்பலொன்றைப் பொலிஸார் நேற்றைய தினம் ( 07.09.2023) கைது செய்துள்ளனர்.

  பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் ( 07.09.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் பெண்ணொருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நால்வரும் யாழில் இயங்கும் பாரிய போதைக்கும்பலின் வலையமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், குறித்த வலையமைப்பைக் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleசீரற்ற காலநிலையால் நாட்டின் போக்குவரத்து பாதிப்பு!
Next articleசிறுநீரக நோய்க்கான அறிகுறிகள்