சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் 17 வயது இளைஞன் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு தாய், தந்தை இல்லை எனவும், பாட்டியுடன் வசித்து வருவதாகவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெமட்டபிட்டிய, லுனுவில பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பெயின்டராக தொழில் செய்து வருகிறார்.

71 வயதான பாட்டி, தனது பராமரிப்பில் இருந்த தனது பேத்தி காணாமல் போயுள்ளதாகவும், அவர் லுனுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருப்பதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும்,  10-ம் வகுப்பு படித்து வருவதாகவும் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

விசாரணையின் விளைவாக, சிறுமி பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் தன்னுடன் காதல் உறவைப் பேணி வருவதாகவும், கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் கட்டுனேரியாவில் உள்ள தனது இல்லத்தில் தம்முடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடைக்கான ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக குறித்த சிறுமி தனது காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்
Next articleநீதி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!