ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

முக்கிய சில தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் அவசர கூட்டம் ஒன்று இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு டார்லி வீதியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மத்திய செயற்குழு கூட்டத்தில் தலைவரினால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அந்த கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார் அத்துடன் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Previous articleமது போதையில் சாராயத்துடன் கோவிலுக்குள் நுழைந்த குருக்கள்
Next articleநல்லூர் ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற மாம்பழ திருவிழா