இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத பொருள்!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 11 கோடி ரூபா பெறுமதியான 45 இலட்சம் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு கொள்கலனில் கொண்டுவரப்பட்டு சுங்கத்துக்கு அறிவிக்கப்படாமல் இவை கொழும்பு கிராண்ட்பாஸ், கிரே லைன் கொள்கலன் பிரிவில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்திய சுங்கப் புலனாய்வுப் பிரிவினர் தகவல் 

இந்திய சுங்கப் புலனாய்வுப் பிரிவினர் இலங்கையின் சுங்கப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவை கைப்பற்றப்பட்டன.

இந்தக் கொள்கலன் கடந்த மாதம் 9ஆம் திகதி இந்தியாவின் கட்டுப்பள்ள துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில் சட்ட விரோத இறக்குமதி தொடர்பில், இந்த கொள்கலனை விடுவிக்க வந்த இருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபட்டதாரி காதலியை கொன்ற காதலன்
Next articleயாழில் பொலிசார் தேடி சென்ற போது விபரீத முடிவெடுத்த நபர்