நாட்டில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கான பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் காலங்களில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைபடுத்தவுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் பிறப்புச் சான்றிதழ் இல்லாத 14 ஆயிரம் பேருக்கு நடமாடும் சேவை ஊடாக பிறப்புச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே பிறப்புச்சான்றிதழ் இல்லாதோர் எதிர்காலத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் வேலைத்திட்டங்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleஇன்றைய வானிலை
Next articleவடக்கில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அமுலுக்கு வர இருக்கும் தடை!