சுற்றுலாவிற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இலங்கை!

சுற்றுலா செல்வதற்கு உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.

சுற்றுலா இணையத்தளமான Big Seven Travel இணையத்தளம் வௌியிட்டுள்ள பட்டியலிலேயே இலங்கை இடம்பிடித்துள்ளது.

2023ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வாய்ப்புகளை கருத்திற்கொண்டு இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டில் பார்வையிட வேண்டிய உலகின் சிறந்த 50 தீவுகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கை 13ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஸ்பெயின், மலேசியா, மாலைதீவு, பாலி, இந்தோனேஷியா, சீஷெல்ஸ் ஆகிய நாடுகளை விட இலங்கை முன்னிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

சுற்றுலா பயணிகளுக்கு நட்புரீதியான விருந்தோம்பல், சுவையான உணவு,பானங்கள், கடற்கரையின் அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடும் திறனை இலங்கை கொண்டுள்ளதாக  அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது