காணமல் போன பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு!

சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் தேடும் பணி இடம்பெற்று வந்தது.

நேற்று (14) மாலை வரை காணாத நிலையில் இன்று (15) 2 ஆம் நாளாக பணி முன்னெடுக்கப்ட்ட நிலையில் புதுஐயங்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சதுரங்க எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார்.

சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

Previous articleகோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும்!
Next articleகணவனால் மனைவிக்கு நிகழ்ந்த சோகம்!