திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது.

முன்னாள் போராளியான விடுதலை பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் சமநேரத்தில் நல்லூரில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.

Previous articleகணவனால் மனைவிக்கு நிகழ்ந்த சோகம்!
Next articleஆசிய கிண்ண இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!