குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபா

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் நேற்று செயல்படுத்தப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை துவக்கி வைக்கும்போது 1 கோடியே 6½ லட்சம் குடும்பத்தலைவிகள் வங்கிக்கணக்கிலும் ரூ.1000 பணம் வரவு வைக்கும் விதமாக நேற்றே அவரவர் கணக்கிற்கு பணம் சென்றடைந்தது. இதனால் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் பெண்கள் குதூகலம் அடைந்தனர்.

பல வீடுகளில் இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கோலம் போட்டிருந்தனர். தி.மு.க.வினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.

அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சென்னையில் வீதிக்கு வீதி நின்று அனைவருக்கும் லட்டு வழங்கினார்கள். பஸ் பயணிகள் ஆட்டோ பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

Previous articleஇன்றைய ராசிபலன்16.09.2023
Next articleஇன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!