ஆபாச படங்களை வெளியிடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிர்வாண படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் அமைச்சரவைப் பத்திரம், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி முதன்முறையாக இதுபோன்ற குற்றத்திற்காக சிக்கும் நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது

Previous articleமகப்பேற்று சிகிச்சை நிலையங்களில் ஏற்ப்பட்வுள்ள மாற்றம்!
Next articleதடுப்பூசியால் உயிரிழந்த பல்கலை மாணவன்!