நீர்க்குழியில் தவறி விழுந்த தந்தை மற்றும் மகள்

கொத்தடுவை IHD நீர் வழங்கல் சபைக்கு அருகாமையில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் நீர் தேங்கியிருந்த குழியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையும் மகளும்  இன்று (19) காலை சுமார் 16 அடி ஆழமுள்ள குழியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் தந்தையும் மகளும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குழியில் தவறி விழுந்து விபத்து

மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் குழியில் தவறி விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

தந்தை மகளை குழியில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளதை தொடர்ந்து பிரதேசவாசிகள் அவர்கள் இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.

இதேவேளை குடிநீர் குழாய் உடைந்ததன் காரணமாக அப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதன் மீதான துப்பாக்கி சூடு குறித்து பா.உ உத்திக விசேட அறிவிப்பு!
Next articleநாட்டுக்கு வரும் சீனாவின் உளவுக் கப்பல்!