ATM உடைத்து கொள்ளை!

நிட்டடம்புவ நகரில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திர ஒன்று உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் இயந்திரம் நேற்றிரவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 7,851,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

விசாரணை

இந்த நிலையில் அருகிலிருந்த சீசீரிவி கெமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருதாகவும் நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleநாட்டுக்கு வரும் சீனாவின் உளவுக் கப்பல்!
Next articleபளுதூக்கல் போட்டியில் சாதனை படைத்த மாணவிகள்