திருமணமான இளைஞனால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

பதினாறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 26 வயதுடைய திருமணமான ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுமி தனது தாயுடன் பியகம பெரக சந்திய பிரதேசத்தில் உள்ள விடுதி அறையில் தற்காலிகமாக தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

இந் நிலையில் திருமணமான அந்த இளைஞர் இந்த சிறுமியுடன் உறவைப் பேணியதாக தெரிய வந்துள்ளது.

அத்தோடு சந்தேக நபர் சிறுமி விடுதியில் இருக்கும்போது அவர் மீது இந்தக் குற்றத்தை செய்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவரும் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.