விடுமுறைக்கு வந்து விபரீத முடிவெடுத்த சுவிஸ் குடும்பஸ்தர்

  வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் இன்று வியாழக்கிழமை (21) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டை சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிறிதரன் அரவிந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறைக்காக தனது தாயாரின் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மனைவி மற்றும் பிள்ளை சுவிஸ்நாட்டில் வசித்து வருவதாகவும், குடும்பத்தை பிரிந்த நிலையில் வாழ்ந்து வந்ததாதகவும் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தில் இருந்தவர் என்றும் உறவினர்களால் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், விசாரணைகளின் பின்னரே உறுதியாக கூறமுடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.