திலீபனின் ஊர்திக்கு அஞ்சலி செலுத்திய வெளிநாட்டு பெண்!

  தமிழ் மக்களின் விடிவிற்காய் தன்னை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்த்திப் பவனி , வவுனியாவிற்கு வந்துள்ளது.

இதன்போது தமிழ் மக்களுடன் வெளிநாட்டு பெண் ஒருவரும் கலந்து கொண்டு தியாக தீபன் திலீபனை தொழுது அஞ்சலி செலுத்தியுள்ளார்.

திலீபன் வழியில் வருகின்றோம்

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் ”திலீபன் வழியில் வருகின்றோம்” என்னும் ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்திப்பவனி அம்பாறை பொத்துவிலில் ஆரம்பித்து 6 ஆவது நாளான புதன்கிழமை (21) வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றிருந்தது. இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வெளிநாட்டு பிரஜைகள், வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் ஊர்தியை வரவேற்று மலர்தூபி அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் வவுனியாவின் நெடுங்கேணி, புளியங்குளம், ஓமந்தை, வவுனியா நகரம், குருமன்காடு, தாண்டிக்குளம், பம்மைமடு, வைரவபுளியங்குளம், திருநாவற்குளம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் ஊர்தி சென்ற நிலையில் அங்கும் பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் உணர்வெழுச்சியுடன் மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை  திருகோணமையில் தியாகி திலீபன் ஊர்திக்கு இனவெறி பிடித்த சிங்கள் பெண்கள் எதிப்[பு வெளியிட்டு அநாகரீகமாக நடதுகொண்ட நிலையில், வெளிநாட்டு பெண் கைகூப்பி தியாகி திலீபனை வணங்கிய சம்பவம் தமிழர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.