இலங்கையில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இந்திய பிரஜை கைது!

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 100க்கும் மேற்பட்ட மடிக்கணினிகளை வைத்திருந்த இந்தியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி மடிக்கணனிகள் தீர்வைக் கட்டணம் செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது.

மடிக்கணனிகள் கடத்தல்

இந்தியாவில் இருந்து வரும் வர்த்தகர்களிடம் கொடுத்து  கடத்தலில் ஈடுபட்டு வந்த இந்திய பிரஜை ஒருவரே வியாழக்கிழமை (21) கைது செய்யப்பட்டார் என கரையோர பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இந்தியாவின் சென்னையில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் உதவியாளர் எனவும், மேற்படி கோடீஸ்வர வர்த்தகர் இவற்றை இலங்கைக்கு கொண்டு வந்து இந்தியாவில் உள்ள வர்த்தகர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை வியாபார நிமித்தமாக நாட்டிற்கு வந்து காலை மற்று மாலை வேளைகளில் இந்தியாவுக்குத் திரும்பும் இந்திய வர்த்தகர்களின் கைகளில் மடிக்கணினிகளை சந்தேகநபர் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அந்த வர்த்தகர்கள் தமது தனிப்பட்ட மடிக்கணினி என அறிமுகப்படுத்தி அவ்வப்போது இந்தியாவிற்கு எடுத்துச் செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.