வாகனங்களுக்கான வருமான வரிப்பத்திரம் இடைநிறுத்தம்!

 மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா தெரிவித்துள்ளார்.

கணனி முறைமையின் புதுப்பிப்பு காரணமாக அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 02 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.