திருமண மண்டபத்தில் தீ – 100 பேர் பலி!

ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருமண மண்டபத்தில் தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைக்க முயலும் படங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.

எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க எல்லா வகையிலும் முயற்சி எடுக்கும்படி ஈராக்கியப் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் சம்பவ இடத்தில் வாணவேடிக்கையால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.