ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த சாதனை படைத்த நேபாள அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாளம் மற்றும் மொங்கோலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நேபாள அணி 3 உலக சாதனைகளை படைத்துள்ளது.

சீனாவில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்நடைபெற்று வருகின்றன.

இதில் ரி20 கிரிக்கெட் போட்டியில் நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 314 ஓட்டங்களை பெற்றுள்ளது. இது ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த போட்டியில் நேபாள வீரர் தீபேந்திர சிங் 9 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து மற்றொரு உலக சாதனை படைத்தார்.

இந்நிலையில் 34 பந்துகளில் சதம் அடித்து நேபாள வீரர் குஷால் மல்லா மேலும் ஒரு உலக சாதனை படைத்தார்.