குளியலறையில் வைத்து மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (27) ஓட்டமாவடி – 1 அல் முக்தார் வீதியில் டம்பெற்றுள்ளது.

கணவன், மனைவி இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடே சம்பவத்துக்கு காரணம் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அபயக்குரல் எழுப்பியதால் காப்பாற்றப்பட்ட பெண்

குறித்த பெண்ணை குளியலறையில் வைத்து கணவன் கத்தியால் கழுத்தையும், கையையும் வெட்டியபோது, பலத்த காயங்களுக்குள்ளான பெண் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள கூக்குரலிட்ட நிலையில் அயலவர்கள் சென்று பெண்ணை காப்பாற்றி மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் 57 வயது மதிக்கத்தக்க பெண் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியைசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்திய கணவன் வாழைச்சேனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.