இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்

 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் நேற்று (செவ்வாய்கிழமை) இது தொடர்பான கடிதத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் அவர் கையளித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது .

இந்நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக வெளிநாட்டு ஒன்றின் ஆலோசகராக பணிபுரியும் ஒருவரை நியமிக்க எரிசக்தி அமைச்சர் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது