வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!

வீடுகளுக்குள் புகுந்து பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்ட ஒருவர் மட்டக்குளி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ, மினுவாங்கொடை, வத்தளை, மஹாபாகே ஆகிய பிரதேசங்களில் சந்தேக நபர் வீடுகளை உடைத்து பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கொள்ளையிட்டப்பட்ட மோட்டார் சைக்கிள், தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசிகள், வெளிநாட்டு நாணயத்தாள்கள் உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பமுனுகம பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என்பதுடன், மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.