மலையக தொடரூந்து சேவைகள் பாதிப்பு!

மரமுறிவு காரணமாக மலையக தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டவளை மற்றும் கலபொட தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளமையால் தொடருந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அம் மரத்தை அகற்றும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.