209 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (16) நடைபெறுகிறது.

லக்னோ மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 43.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 209 ஓட்டங்களைப் மட்டுமே பெற்றது.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Adam Zampa, 4 விக்கெட்டுக்களை பெற்றார்.

இலங்கை அணி சார்பில் Kusal Perera 78 ஓட்டங்களையும் Pathum Nissanka 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

உலக கிண்ண போட்டிகளில் இலங்கை அணி 2 போட்டிகளில் தோல்வி கண்டுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா என்பது அனைத்து இலங்கை அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.