யாழில் காதலி கூறிய வார்த்தையால் விபரீத முடிவெடுத்த காதலன்

யாழ்ப்பாணத்தில் காதலித்த பெண் தன்னை திருமணம் செய்யாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறியதால் பயத்தில் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் நெளுங்குளம் வீதி கொழும்புத்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காதலித்த பெண்ணுக்கு வயது குறைவு என்பதால் தந்தையார் மகனை பெண்ணுடன் கதைக்க வேண்டாம் எனவும் வயது வந்ததும் திருமணம் தொடர்பில் பேசலாம் என பெண் வீட்டாரிடமும் கூறியுள்ளார்.

அது பெண்ணுக்கு பிடிக்கவில்லை. இதனால் தன்னை திருமணம் செய்யாவிடில் தான் தவறான முடிவெடுக்கவுள்ளதாக பெண் தனது காதலனுக்கு தொலைபேசியூடாக தகவல் அனுப்பியுள்ளார்.

இதனால் பீதியடைந்த இளைஞர் நேற்றையதினம் (15-10-2023) மாலை தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

இந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.