வட கிழக்கில் பூரண கர்த்தால்

நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சந்திபானது நேற்றைய தினம் (17-10-2023)  இடம்பெற்றுள்ளது.

இதன்படி, வடக்கு – கிழக்கு பகுதிகளில் எதிர்வரும் 20 ஆம் திகதி பூரண கதவடைப்பு மேற்கொள்வதற்காக நேற்று கிளிநொச்சி வர்த்தக சங்கம், தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் ஆகியோருடன் மேற்கொண்ட சந்திப்பின் பொழுது அனைத்து தரப்பினரும் முழுமையான பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடக சந்திப்பில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.