ஒரே சூழில் பிறந்த 6 குழந்தைகளில் ஒன்று உயிரிழப்பு

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒரே சூலில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்று புதன்கிழமை (18) உயிரிழந்துள்ளது.

ராகம பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை (17) ஒரே சூழில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்நிலையில், அதில் ஒரு குழந்தை நேற்று (18) பிற்பகல் உயிரிழந்துள்ளது.

சுமார் 400 கிராம் எடை கொண்ட இந்த குழந்தைக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டு பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.