அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த தேவைகள்  (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு முதலீட்டாளர் ஒரு சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகத்தை நடத்த குறைந்தபட்சம் 05 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும்.

குறித்த முதலீட்டாளருக்கு சுங்க வரியில்லா வர்த்தக நடவடிக்கைகளில் உலகளாவிய அனுபவமும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுங்க வரியில்லா வணிக வளாக வர்த்தகத்தை நடத்துவதற்கு, ஒரு முதலீட்டாடளர் குறைந்தபட்சம் 07 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.