கொலை சம்பவம் தொடர்பில் இளம் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளம்பெண் உள்பட 3 பேர் கிளிநொச்சி – இராமநாதபுரம் மாயனூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 25ஆம் திகதி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை தடியால் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பான விசாரணையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் எனவும் பெண் சந்தேகநபர் 18 வயதுடையவர் எனவும் அவர்கள் மாயனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தகாத உறவின் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.