வடமாகாண பூப்பந்தாட்ட போட்டி ஆரம்பம்!

வட மாகாண பூப்பந்தாட்ட போட்டி இன்று (31) ஆரம்பமானது. குறித்த போட்டிகள் இன்று முதல் 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த போட்டியின் ஆரம்ப நிகழ்வு வடமாகாண பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 10 மணியளவில் ஆரம்பமானது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள உள்ளக அரங்கில் ஆரம்பமான குறித்த ஆரம்ப நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது வருகை தந்த அதிதிகளுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.