தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக முதலமைச்சர் மு,க ஸ்டாலின் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் தற்போது மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் பணி, கட்சி பணி என தீவிரம் காட்டி வரும் முதலமைச்சருக்கு நேற்று திடீரென காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததுள்ளது.

இதன் காரணமாக அவர், மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு,க ஸ்டாலினுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.