வீடொன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

அவிசாவளை, ஹுலத்துவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (06) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஹுலத்துவ, கெடஹெத்த பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.