இலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த தாய் மற்றும் மகன்!

நுவரெலியா – ஹேவாஹெட்ட பிரதேசத்தில் குளவிகள் தாக்கியதில் தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குடியிருப்புக்கு அருகாமையில் குறித்த இருவரும் நேற்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாயை காப்பாற்ற சென்ற மகன்

இருவரும் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது 59 வயதுடைய மகன் அன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பெற்று வந்த 85 வயது பெண்ணும் நேற்று உயிரிழந்தார். தமது வீட்டிற்கு அருகாமையில் நின்ற போது குளவி கொட்டுக்கு இலக்கான தாயை காப்பாற்ற முற்பட்ட போது மகனும் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் இருவரும் ஆபத்தான நிலையில் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.