யாழில் கொலை செய்து தமிழகத்திற்கு தப்பி சென்ற நபர்

யாழ்ப்பாணத்தில் கொலை சம்பவம் ஒன்றின் பிரதான சந்தேகநபர் ஒருவர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சந்தேக நபர் யாழிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (11) சனிக்கிழமை காலை கரையிறங்கியுள்ளார்.

இது தொடர்பில் தகவல் கிடைத்த கடற்படை பொலிஸார் அவரை அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ் அரியாலை, சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு படகு மூலம் தப்பித்து தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் புகைப்படத்தின் அடிப்படையில், அவர் மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் கொலை வழக்கு ஒன்றுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபர் என யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.