யாழில் தலைமுடியால் வாகனம் இழுத்து சாதனை!

யாழ் – தென்மராட்சி மட்டுவில் கிராமத்தைச் சேர்ந்த 60வயதான உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் தீபாவளி தினத்தை முன்னிட்டு  (12/11/2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணிக்கு மட்டுவிலில் சாகச நிகழ்வொன்றை நிகழ்த்தியுள்ளார்.

மட்டுவில் கண்ணகை சிறுவர் கழக முன்றலில் இருந்து 1கிலோமீட்டர் தூரம், இரண்டாயிரம் கிலோ எடை கொண்ட வாகனத்தை தனது தலை முடியால் இழுத்தும், தாடியால் இழுத்தும் சாகசம் நிகழ்த்தியிருக்கின்றார்.

இவர் அண்மையில் தனது முகத் தாடியினால் 400 மீற்றர் தூரம் 1500கிலோ எடை கொண்ட வாகனத்தை இழுத்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.