திருகோணமலையில் மிதி வெடி மீட்பு!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்திலுள்ள பம்பான்குளம் கட்டுக்கு அருகில் மிதிவெடியொன்று காணப்படுவதாக தோப்பூர் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று திங்கட்கிழமை காட்டுக்கு மாடு மேய்ப்பதற்காகச் சென்றவர்கள் மிதிவெடி ஒன்று இருப்பதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த இடத்திலேயே மிதிவெடி காணப்படுவதோடு, மிதிவெடியை அகற்வதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.