யாழ் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ் – ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலானது நேற்று (13.11.2023) இரவு நடத்தப்பட்டுள்ளது.

இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் | Petrol Bomb Attack In Yali

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.