முதலை வாயில் சிக்கிய நபர் காயங்களுடன் மீட்பு!

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஒருவர் முதலைப்பிடியில் சிக்கி பலத்த போராட்டத்திற்கு மத்தியில் காலில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இச்சம்பவமானது நேற்று (2023.11.13) அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரொட்டைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாடுகளை மேய்ப்பதற்காக ரொட்டைக் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றை கடக்க முற்பட்ட போதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் என்ற குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு முதலைப்பிடியில் சிக்கியுள்ளார்.

முதலைப்பிடியிலிருந்து பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.