அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!

5 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் தியத்தலாவ கஹம்பிலிய புதிய கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வலம்புரி சங்கை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய தயாராகி வருவதாக விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்