கடும் மழையால் சேதமடைந்த இந்து ஆலயம்!

 யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் பெய்த கடும்மழைகாரணமாக எட்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/388 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும், ஜே/400 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/167 கிராம சேவகர் பிரிவில் ஆலயம் ஒன்றிற்கு அருகில் நின்ற அரச மரம் ஆலயத்தின் மீது குடைசாய்ந்ததில் ஆலயம் சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.