சட்டவிரோதமாக சீனி பதுக்கி வைத்திருப்பவர்களுக்கான செய்தி!

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சீனியை மீட்டு கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் நுகர்வோர் சட்டத்தின் கீழ் உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, சீனி இருப்புக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை கண்டறியும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.