ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயராகும் பிரபல அரசியல்வாதி!

நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டு வரும் பலம் வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார்.

அதற்காக எதிர்க் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களின் ஆதரவவை பெற முயற்சித்துள்ளதாகவும் அவர்களின் உதவியுடன் தேர்தல் பணிகளை முன்னெடுத்து செல்வதற்காக செயற்பட்டு வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று பிற்பகல் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தல்
அதற்காக தனது கட்சியின் ஆதரவைப் பெறுவது குறித்தும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பல சர்வதேச உறவுகளைக் கொண்ட இந்த அரசியல் தலைவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தற்போது தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் இதில் முழுமையாக கலந்து கொண்டு அரசியல் சபை அமைப்பது தொடர்பிலான விடயங்கள் மேற்கண்ட கலந்துரையாடலில் தெரியவந்துள்ளன.