மட்டக்களப்பில் முதன் முதலாக சாதனை படைத்த மாணவி!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று கோட்டக்கல்வி வலயத்துக்குட்பட்ட மட்/பட்/மண்டூர் கண்ணன் வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டு ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் 5 மாணவர்கள் தோற்றிய போது கோபலசிங்கம் -திவானி மாணவி 159 புள்ளிகளைப் பெற்று முதல் தடவையாக பாடசாலையில் சாதனைபடைத்துள்ளதாக பாடசலை அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் இப்பாடசலை பல தடவைகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கட்டிடங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டு பாடசாலை மாணவர்கள் கல்வியை மேற்கொள்வதற்காக கட்டிட வசதிகள் இல்லாமல் பல வருடங்களாக கல்வியை மேற்கொண்டு வந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலும் திவானி உட்பட இப்பாடசாலையிலே ஜெகநாதன் -திரிஸ்கா 127,யோகராஜா-தனுசிகா-101, மற்றும் சுரேஸ்குமார்- சினேகா-69 ஆகியோர் இந்த புள்ளிகளை பெற்றுள்ளமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் அடைவு மட்டத்திற்கு மேல் புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் கிராமத்துக்கும் கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு உதவி செய்த கைகொடுக்கும் அமைப்புக்கும் நட் பெயரினை பெற்றுத்தந்தமைக்கு கிராமத்து பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.