மழை வெள்ளத்தால் புதுக்குடியிருப்பு மக்கள் பாதிப்பு!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மழை வெள்ளத்தினால் 8 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் நேற்றிரவு(16) பெய்த கடும் மழையினால் மக்களின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சீரற்ற காலநிலை

தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

இதனால் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும், வர்த்தகர்களும், அப்பகுதி மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு புதுக்குடியிருப்பு ஸ்ரீசுப்பிரமணிய வித்தியாசாலை மற்றும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு செல்லும் வீதி அத்தோடு நகர்ப்பகுதியில் உள்ள பல வீடுகளிற்குள்ளும் வெள்ளநீர் புகுந்ததனால் பெரிதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் கடந்த சில வருடங்களாக மழைநீர் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு சிறந்த நீர்வடிகாலமைப்பு பொறிமுறை ஒன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு இல்லாமையும், அரச திணைக்களங்களின் அசண்டையீனமே காரணம் எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.