பண்டிகை காலத்தில் இறைச்சி முட்டை விலை குறைவடையும்!

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வெட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தால் இந்நிலை மாறலாம் என அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.

சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புவதால் முட்டையொன்று 35 – 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் காணப்படுவதாக அஜித் குணசேகர மேலும் தெரிவித்தார்