மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸாரினால், தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதிக்க கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மீதான விசாரணை நேற்று (17) வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என மனுவை மன்று தள்ளுபடி செய்தது.