பேருந்தில் இருந்து தவறி விழுந்த கணவன் மனைவி!

கொழும்பு சிலாபம் வீதியில் கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த பேருந்தின் படிக்கட்டில் இருந்து கணவனும் மனைவியும் விழுந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் 56 வயதுடைய அம்பலன்முல்ல, சீதுவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவர் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.